திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (07:32 IST)

சென்னை வருகிறேன்: தமிழில் டுவிட் போட்ட பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வரவுள்ளார். அவரது வருகையை அடுத்து சென்னை முழுவதும் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சென்னைக்கு வரவிருப்பதை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தமிழில் ஒன்றை பதிவு செய்துள்ளார். நாளை நான் சென்னையில் இருப்பேன் என்று அவர் பதிவு செய்துள்ள வீட்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிரதமர் மோடியின் டுவிட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது