டெஸ்ட் மேட்ச்சின் போது, வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி நிதனமாக விளையாடி 300 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.
இந்நிலையில், இப்போட்டிகளைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள், வலிஐ படத்தின் அப்டேட் கேட்டு கையில் பதாகைகளுடன் வந்தனர்.
போட்டி நடந்துகொண்டிருக்கும்போது, அந்தப் பதாகைகளை கேமராவை நோக்கிக் காட்டி, வலைமை அப்டேட் கேட்டனர். இதுகுறித்த புகைப்படம் வைரலானது.அங்கு மொயீன் அலியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ வைரலானது.
சமீபத்தில்,முதல் முறையாக வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர் போர்ப்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் வலிமை குறித்து பேசியுள்ளார். அதில் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடியும். இன்னும் ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படம்பிடிக்கப்பட வேண்டியுள்ளது. பின் தயாரிப்புப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். ரிலிஸ் தேதியும் விரைவில் இறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.,