காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்கு காலணிகள் அனுப்பி வைத்த பிரதமர்!
காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்கு காலணிகள் அனுப்பி வைத்த பிரதமர்!
காசி விசுவநாதர் கோயில் பணியாளர்களுக்கு சணலால் செய்யப்பட்ட 100 காலணிகளை பிரதமர் மோடி அனுப்பியுள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள கோவில் பணியாளர்கள் காலணி அணியாமல் வெறும் காலால் நடந்து செல்வதை பார்த்தார்.
கோவிலின் உள்ளே தோல் ரப்பர் ஆகியவை ஆகியவைகளால் செய்யப்பட்ட காலணிகள் அணியக்கூடாது என்ற தடை காரணமாக வெறும் காலால் நடந்ததையும் பார்த்த பிரதமர் மோடி, பல்வேறு வண்ணங்களில் உருவாக்கப்பட்ட 100 ஜோடி சணலால் செய்யப்பட்ட காலணிகளை காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்காக அனுப்பி வைத்துள்ளார் இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது