1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. FIR registered from security in punjab

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி: 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது எஃப்.ஐ.ஆர்!

பஞ்சாப்
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொள்ள வருகை தந்தார். அப்போது அவரது வருகையை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அவர் டெல்லி திரும்பி சென்றார் என்பது குறிபிடத்தக்கது
 
பாதுகாப்பு குளறுபடி காரணமாகவே இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாப் மாநில காவல்துறையினர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பஞ்சாப் மாநில காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்