1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Election commission order to remove PM Modi pic from vaccine certificate

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் நீக்கம்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Vaccine Certificate
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடியின் புகைப்படம் தடுப்பூசி சான்றிதழில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன நேரம் குறைப்பு: பக்தர்கள் அதிருப்தி!