1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi Punjab visit for campaign

பிரதமர் பஞ்சாப் விசிட்; வீட்டு சிறையில் விவசாய தலைவர்கள்!

PM Modi
பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்ற நிலையில் விவசாய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றார். கடந்த மாதம் இதுபோல ஒரு நிகழ்ச்சிக்காக பிரதமர் பஞ்சாப் சென்றபோது அங்கு விவசாய சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதால் நிகழ்ச்சியை ரத்து செய்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதற்காக நேற்று முன்தினமே பஞ்சாப் போலீஸார் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பலரை வீட்டு சிறையில் வைத்துள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருவையும் முற்றிலும் தனிமைப்படுத்தியதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விஜய்க்கு ஓட்டு கேட்டு வந்த எம்.ஜிஆர்! – திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்!