1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:06 IST)

சட்டமன்ற தேர்தல்: 5 மணி நிலவர வாக்குபதிவு விவரம்!

கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

 
உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் 55 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
 
இந்நிலையில் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 60.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.