1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:35 IST)

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி தள்ளிவைப்பு!

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று நடைபெற இருந்த தாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு வெளியான அறிவிப்பில் இந்த கவுன்சிலிங் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் கவுன்சிலின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் அரசு நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் ஒரு சில காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பல்வேறு வகையான மாறுதலுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்