1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2022 (08:06 IST)

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு

gujarat bridge
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு
குஜராத் மாநிலத்தில் நேற்று தொங்குபாலம் விழுந்த விபத்தில் 91 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற ஆற்றில் தொங்குபாலம் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது. இந்த நிலையில் இந்த தொங்கு பாலம் நேற்று மக்கள் பயன்பாட்டின் போது திடீரென அறுந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான ஆற்றில் விழுந்தனர்
 
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டனர். அந்த பகுதி மக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்
 
ஆனால் பெண்கள் குழந்தைகள் உள்பட இந்த விபத்தில் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பு ஏற்பதாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது
 
Edited by Siva