1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Russian president Putin congrats to PM Modi

இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலம்: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

modi and putin
இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின்  பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
 
பிரதமர் மோடிக்கு உலகின் பல நாடுகளின் அதிபர்கள் பாராட்டுகளை அவ்வப்போது பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நெருக்கமாக இருப்பதாகவும் இரு தரப்பின் நட்பு காரணமாக இந்தியா ரஷ்யா இடையிலான வர்த்தகம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரஷ்யாவுக்கு உலகம் முழுவதும் பொருளாதார தடை விதித்த போதிலும் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்த ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி போன்ற உலக தலைவர்கள் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிநாட்டு கொள்கையை சிறப்பாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பருவமழைக்கு தயாரா? 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!