செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (10:06 IST)

நீக்கியது தடை: சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி!!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

 
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் காரணமாக பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திவ்யா என்பவரை உத்தரவிட்டார். 
 
மழை குறைந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின்னரே ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் சற்று முன் ஆட்சியர் திவ்யா, மழை நின்று பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு தடை நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.