வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (11:31 IST)

கேரள மக்களுக்கு ராகுல் காந்தி ஸ்பெஷல் ட்விட்!!

தமிழகத்தை போலவே தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எர்ணாகுளம் திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
மேலும் கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, கேரள மக்களை கவனமுடன் இருக்கும்படி காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 
 
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கனமழை பெய்து வரும் கேரளாவில் நமது சகோதர, சகோதரிகள் தைரியமாக இருக்கிறார்கள். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கவனமாக இருங்கள், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.