தொடர்புடைய செய்திகள்
- பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கிளை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுதடை: மத்திய அரசு
- தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
- அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்: அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு!
- சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்!
பி.எப்.ஐ. அமைப்பின் ட்விட்டர் பக்கம் நீக்கம்: விட்டர் நிறுவனம் நடவடிக்கை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை அடுத்து தமிழகம் கேரளா உள்பட பல மாநிலங்களில் அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் டுவிட்டர் பக்கமும் நீக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ட்விட்டர் பக்கம் மத்திய அரசு தடையை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ட்விட்டரை அடுத்து மேலும் சில சமூக வலைத்தளங்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பக்கங்களை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
