சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்!
சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவு.
ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு சவுக்கு சங்கர் மாற்றப்பட்ட விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவு அளித்துள்ளது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் உள்ளார்.