வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (13:15 IST)

தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

PFI
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை சட்டரீதியாக அணுகுவோம் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
தீவிரவாதத்திற்கு துணை போவதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து என்.ஐ.ஏ அதிரடியாக சோதனை செய்தது
 
இந்த நிலையில் இன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது
 
மத்திய அரசின் தடையை அடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.