1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (08:43 IST)

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்: அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு!

Joe Biden
அமெரிக்காவின் நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடுகள் பட்டியலில் இதுவரை ஆப்கானிஸ்தான் இருந்து வந்தது என்பதும் தற்போது திடீரென ஆப்கானிஸ்டன் அந்த பட்டியலில் இருந்து நீக்க படுவதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2012ஆம் ஆண்டு நேட்டோ அல்லாத நட்பு நாடாக ஆப்கானிஸ்தானை அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் திடீரென தற்போது நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் வன்முறை காரணமாகவே அமெரிக்க அதிபர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது