நேஷ்னல் லீவ் வேண்டும்: மோடிக்கு லெட்டர் போட்ட யஷ் ஃபேன்ஸ்!!
யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'கேஜிஎஃப்'. இப்படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் ஜூலை 16 ஆம் தேதி படம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்கக்கோரி யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்த கடிதத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.