1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:58 IST)

விவசாயிகளை சந்திக்க சென்ற எம்.பிக்கள் தடுத்து நிறுத்தம்; ஆணிகளை அகற்றிய விவசாயிகள்!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிக்கள் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லைப்பகுதிகளில் சாலையில் ஆணி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்க தமிழக எம்.பிக்களான கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் மற்றும் பல எதிர்கட்சி எம்.பிக்கள் சென்ற நிலையில் அவர்கள் உத்தர பிரதேச – டெல்லி எல்லையான காஸியாபாத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதராவக எதிர்கட்சி எம்.பிக்கல் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் எல்லையில் அமைக்கப்பட்ட ஆணிப்பலகைகள் விவசாயிகள் உடைத்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.