செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:32 IST)

டெல்லி வன்முறை; நடிகர் தீப்சித்து பற்றி தகவல் சொன்னால் சன்மானம்!

டெல்லி குடியரசு தின நாளில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் நடிகர் தீப்சித்து பற்றி தகவல் சொல்பவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் செங்கோட்டையில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்களில் பஞ்சாபி நடிகரான தீப்சித்து முக்கியமான நபராக கருதப்படுகிறார். அவரை பிடிக்க போலீஸார் முயற்சித்து வரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். எனவே நடிகர் தீப்சித்து பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூடாசிங், சுக்தேவ் உள்ளிட்ட மேலும் இருவர் பற்றி தகவல் சொல்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.