1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Opportunity until September 30 ... People happy

செப்டம்பர் 30 வரை அவகாசம்...மக்கள் மகிழ்ச்சி

கனரக வாகனங்கள்
இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் கடந்த சில மாதங்களாக  அரசு அலுவலகங்கள் குறைவான எண்ணிக்கையில் குறைந்த அலுவலர்களைக் கொண்டுதான் இயங்கியது.

இந்நிலையில் அனைத்து கனரக வாகனங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான சான்றுகள், மற்றும் ஆவணங்களைப் புதுப்பிக்க செப்டம்பர் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல  சான்றிதழ்களையும் புதுப்பிக்க மத்திய அரசு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவசாகம் அளித்துள்ளதாக மக்களும், ஓட்டுநர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
10 ஆம் வகுப்பு சான்றிதழ்… மதிப்பெண்களை இடம்பெறச் செய்யவேண்டும் – ஓபிஎஸ் கோரிக்கை!