1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Onion rate increased, central govt action

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

வெங்காயம்
வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், சில்லறை விற்பனையில் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சேமிப்பு கிடங்குகளில் கையிருப்பாக உள்ள வெங்காயத்தை சந்தையில் விநியோகம் செய்து, விலை உயர்வை கட்டுப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சேமிப்பு கிடங்குகளில் உள்ள வெங்காயத்தை டெல்லி உள்பட மாநிலங்களின் தலைநகரங்களில் விநியோகம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதேபோல், தக்காளி விலையும் உயர்ந்தால், வெங்காயத்தைப் போலவே, மத்திய அரசு அதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, வெங்காயத்தின் விலை கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்