1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் அமெரிக்கா பெடரல் வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் மற்றும் போர் பதற்றம் ஆகியவை காரணமாக பாதுகாப்பான முதலீடு தங்கம் என்று முடிவு செய்த பொதுமக்கள் அதில் முதலீடு செய்து வருவதால் தான் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,980 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய்  55,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,435  எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!