1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

3 நாள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Gold
கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை சரிந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,885 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய் 55,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,340 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,720 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 97.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  97,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை! அரசின் அதிரடி அறிவிப்பு..!