1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (15:33 IST)

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்”.! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!!

Election
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
கடந்த 2014 ம் ஆண்டு முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு  செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது.  
 
இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. 
 
One Election
இதனைத் தொடர்ந்து 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்தது.  அந்த அறிக்கையில் “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே என்றும் அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

 
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான மசோதா வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.