ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (21:54 IST)

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..! ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை..!!

Cabinet Meeting
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 290 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. அதேபோல இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
 
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பதால், மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.