1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (13:06 IST)

வெளியுறவுத் துறையை தக்கவைக்கிறாரா ஜெய்சங்கர்?வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு

வெளியுறவுத் துறையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தக்கவைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று வெளிநாட்டு தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்தியதை அடுத்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். அதேபோல் மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை செய்தார்.
 
பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை வெளியுறவு துறையின் அமைச்சர்கள் தான் சந்தித்து பேசுவது வழக்கம். எனவே துறை ஒதுக்காத நிலையில், வெளிநாட்டு தலைவர்களை ஜெய்சங்கர் சந்திப்பதால் வெளியுறவுத்துறையை மீண்டும் தக்க வைப்பது உறுதியாகி உள்ளது என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியுறவுத்துறையை மிகவும் சிறப்பாக கவனித்து வந்த ஜெய்சங்கர் மீண்டும் வரும் ஐந்து ஆண்டுகளில் அவரே இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.. 
 
Edited by Mahendran