1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (15:15 IST)

துணை முதல்வர் பதவி எப்போது? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

Udaya Nithi
துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து சென்னையில் உதயநிதி ஸ்டாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார் என்றும் முழுக்க முழுக்க அது முதல்வரின் முடிவு தான் என்றும் கூறியுள்ளார்.
 
என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும், அவர்களின் விருப்பத்தையே சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியிருந்தார் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு  மாலையிட்டது, நல்ல விஷயம் தான் எனக் கூறியுள்ளார்.

 
யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்றும் நண்பர் விஜய்க்கு என் வாழ்த்துகள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.