கோவையில் தோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியா? ஆச்சரிய தகவல்..!
சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
நேற்று திடீரென அமித்ஷா மற்றும் நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் அவரது பெயர் மத்திய அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த எல்மு முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்த நிலையில் புதியவர்களை அமைச்சராக்க பாஜக முடிவு செய்ததாக கூறப்படுகிறது
மேலும் நிதி அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கும் இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புது முகங்களை அமைச்சரவையில் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கும் நிலையில் அதில் அண்ணாமலை பெயரும் உள்ளதாகவும் அவருக்கு ஒரு முக்கியத்துறை கொடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva