1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (11:21 IST)

காதுகளை காலியாக்கும் ஒமிக்ரான்: ஆய்வில் பகீர்!

ஒமிக்ரான் வைரஸ் மனிதனின் காதின் உட்பகுதியை தாக்கும் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்றும் பெருநகரங்களில் தொற்று பரவலின் முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் அவர் அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
மேலும் அறிகுறி இல்லாத போதிலும் ஐசியூவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் ஒமிக்ரானின் மாறுபாடான பி.ஏ.2 திரிபை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டன், டென்மார், நார்வே ஆகிய 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய மாறுபாடு தற்போதை ஒமிக்ரானை விட வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் ஒமிக்ரான் தாக்கினால் சளி, இருமல் மட்டுமே இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், கண், இதயம், மூளை உட்பட உடலின் பல பாகங்களை இது தாக்க கூடும் என சமீப காலமாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. இது காதின் உட்பகுதியை தாக்கும் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.