1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 30,580 cases today corona in tamil nadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!

corona
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 30,580 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 31,33,990 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 30,580 பேர்களில் 6,383 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 40 பேர் பலியாகியுள்ளனர். 
 
மேலும் தமிழகத்தில் இன்று 24,283 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,57,732 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
 
 
அடுத்த கட்டுரையில்
ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்களை ஆர்டர் செய்த 2 வயது சிறுவன்: என்ன நடந்தது?