தொடர்புடைய செய்திகள்
- 'லண்டன் தமிழச்சி' பேட்டி: கொரோனா காலத்தில் யூடியூப் சேனலை நிறுத்த நினைத்தேன்"
- 14 நாட்களில் கொரோனா உச்சம் அடையும்! – சென்னை ஐஐடி கணிப்பு!
- முடிவுக்கு வருகிறது கொரோனா பாதிப்பு: நல்ல செய்தி சொன்ன உலக சுகாதார அமைப்பு!
- 35.19 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- மூன்றாவது போட்டியிலும் இந்தியா தோல்வி: தொடரை இழந்தது
மீண்டும் குறைய தொடங்கியுள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,95,43,328 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 439 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,89,848 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,65,60,650 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 22,49,335 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
