ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

முடிவுக்கு வருகிறது கொரோனா பாதிப்பு: நல்ல செய்தி சொன்ன உலக சுகாதார அமைப்பு!

முடிவுக்கு வருகிறது கொரோனா பாதிப்பு: நல்ல செய்தி சொன்ன உலக சுகாதார அமைப்பு!
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் வரும் மார்ச் மாதத்துடன் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என்றும் படிப்படியாக மற்ற நாடுகளிலும் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் உலக சுகாதார அமைப்பு நல்ல செய்தியைச் சொல்லியுள்ளது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் வரும் மார்ச் மாதத்துடன் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வரும் என்றும் அதன் பின்னர் மார்ச் மாதத்திற்கு பிறகு சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்கு உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் மடியத் தொடங்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
இந்த தகவல் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி மிக வேகமாக செலுத்தப்பட்டு வருவதால் இன்னும் ஒரு சில மாதங்களில் உலகில் கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது