தொடர்புடைய செய்திகள்
- 26.61 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 7 பேருக்கு ஒமிக்ரான்: அதிர்ச்சி தகவல்
- 3ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து திணறல்: ஐந்து விக்கெட்டை இழந்து தவிப்பு!
- இந்தியர்களுக்கு நன்றி கூறிய ‘மணி ஹெய்ஸ்ட்’ குழுவினர்!
- சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா?
ஒரே நாளில் 17 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: இந்தியாவில் மீண்டும் ஒரு அலையா?
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் ஒரு அலை தோன்றி விடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையும், இந்த ஆண்டு 2வது அலையும் வீசிய நிலையில் தற்போது தான் கொரோனாகட்டுப்பாட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி விட்டது என்பதும் நேற்று முன்தினம் வரை மூன்று பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல் அலை, இரண்டாவது அலைபோல் ஒமிக்ரான் அலையும் இந்தியாவில் தோன்றுமோ என்ற அச்சத்தை அரசு தான் போக வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்
