செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (19:09 IST)

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 7 பேருக்கு ஒமிக்ரான்: அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஏழு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று வரை இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மூன்று பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பரவியதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் பரவியது. 
 
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஏழு பேருக்கு மேல் ஒமிக்ரான் பரவி உள்ளதால் இந்தியாவில் மொத்தம் பத்து பேருக்கும் அதிகமாக ஒமிக்ரான் பரவி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று பரவி இருந்த நிலையில் தற்போது ஏழு பேருக்கு ஒமிக்ரான் பரவியுள்ளதால் அம்மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளிமாநிலங்களில் இருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்க படுவார்கள் என்றும் கூறப்படுகிறது
 
இதே ரீதியில் சென்றால் மீண்டும் நாடு முழுவதும் லாக்டவுன் வந்து விடுமோ என்ற அச்சமும் பொது மக்கள் மனதில் வெளியாகியுள்ளது