1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (19:02 IST)

3ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து திணறல்: ஐந்து விக்கெட்டை இழந்து தவிப்பு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது
 
இரண்டாவது இன்னிங்சை 502 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து சுழல்பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்தது என்பதும் இதன் காரணமாக நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
3 விக்கெட்டுகள் அஸ்வின், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட் என 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி தற்போது தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் இரண்டு நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகள் விழுந்து விட்டால் இந்திய அணி மாபெரும் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது