1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Omicron 4,461 cases in India

நாட்டில் 4,461 ஆக எகிறிய ஒமிக்ரான் தொற்று - அச்சத்தில் மக்கள்!

இந்தியா
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 4,000 ஆக பதிவாகியுள்ளது. 


 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 4,461 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் தொற்றில் இருந்து 1,711 பேர் நேற்று குணமடைந்த நிலையில், 2,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,247 பேரும் ராஜஸ்தானில் 645 பேருக்கும் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash