பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல்வர்!
தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்த தொடங்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும், 60 வயது மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று முதலாக தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் தனக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.