1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (18:59 IST)

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் யாரும் இல்லை; காங். எம்.பி., செல்லக்குமார்

Train Crash
ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்ட விபத்து உலகையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இந்த விபத்தில் 200க்கும் அதிகமானவர் இறந்துள்ளதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
பிரதமர் மோடி, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகிறார்கள் என்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரயில் விபத்து நடந்தவுடன் மீட்பு பணிக்கு தேவையான வசதிகள் இல்லாததால்,  அதிகாரிகள் கண் முன்னே பல உயிர்கள் பறிபோனது என்றும், பாலசோர் மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், போதிய வசதி இல்லாததால் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், காங். எம்.பி., செல்லக்குமார் தெரிவித்தார். 
 
மேலும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran