வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (18:05 IST)

அன்ரிசர்வ்ட் பெட்டியில் தான் அதிக பலி, சிலருக்கு ஹார்ட் எல்லாம் வெளியே வந்துருச்சு: உயிர் தப்பிய பயணி பேட்டி..!

ஒடிஷாவில் நடந்த ரயில் விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்ரிசர்வ்ட்  பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு தான் மிகப்பெரிய பாதிப்பு என்றும் ஒரு சிலருக்கு ஹார்ட் எல்லாம் வெளியே வந்துவிட்டது என்றும் இந்த ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய இளம் பெண் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். 
 
ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் இருந்து தப்பி சென்னை வந்த இளம்பெண்  செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்த விபத்து சுமார் 7 மணி அளவில் நடந்தது. நான் பயணம் செய்த பெட்டி ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தது, லேசாக சரிந்ததால் பயணிகளுக்கு சிறிய காயங்கள் தான் ஏற்பட்டது. 
 
ஆனால் எங்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் இருந்தவர்கள், ஸ்லீப்பர் பெட்டியில் இருந்தவர்கள் மற்றும் அன்ரிசர்வ்ட்  பெட்டியில் பயணம் செய்தவர்கள் தான் அதிகம் பலியாகினர்.  குறிப்பாக ஒரு சிலருக்கு ஹார்ட் எல்லாம் வெளியே வந்து விழுந்ததாக கூறப்பட்டது
 
நாங்கள் அங்கிருந்து ஒருசில கிலோமீட்டர் நடந்தே சென்று பேருந்தில் பயணம் செய்து சென்னைக்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran