செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (17:43 IST)

ஒடிஷா ரயில் விபத்து: நேரில் பார்வையிடும் பிரதமர் மோடி..!

Pm Modi Sad
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே குலுக்கிய நிலையில் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி நேரில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். 
 
நேற்று மாலை நடந்த 3 ரயில்கள் மோதிய ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. உலக தலைவர்கள் உட்பட உள்ளூர் தலைவர்கள் வரை இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி சற்றுமுன் ஒடிசா வந்தடைந்தார். புவனேஷ்வர் விமான நிலையத்திலிருந்து விபத்து பகுதிக்கு அவர் ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். 
 
ரயில்வே விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி அதிகாரிகளிடம் ஆலோசனைகள் ஈடுபட உள்ளார். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் மருத்துவமனையில் அவர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran