1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (18:49 IST)

ஒடிஷா ரயில் விபத்து எதிரொலி: மேலும் சில ரயில்கள் ரத்து.. முழு விபரங்கள்..!

Train
ஒடிஷா ரயில் விபத்து காரணமாக மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
இன்று இரவு 11 மணிக்கு மங்களூரு - சந்திரகாச்சி செல்லும் விவேக் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
நாளை காலை 7 மணிக்கு சென்னை - ஷாலிமர் செல்லும் கோரமண்டல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
நாளை காலை 8.10 மணிக்கு சென்னை - சந்திரகாச்சி செல்லும் ஏ.சி. விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
வரும் 6ம் தேதி காலை 6.20 மணிக்கு கவுகாத்தி - பெங்களூரு செல்லும் வாராந்திர விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
வரும் 7ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு காமாக்யா - பெங்களூரு செல்லும் ஏ.சி. விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran