ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்!
ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றி உள்ளதாக தெகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நேற்று 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவர் காயம் அடைந்து வெற்றி பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. http://ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் சென்று பார்த்து தங்கள் உறவினர் நிலையை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran