உயிரே போனாலும் பாஜகவோடு கூட்டணி இல்ல..!? – நிதிஷ்குமார் உறுதி!
பீகார் மாநில முதல்வரான நிதிஷ்குமார் சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த நிலையில் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார்.
பீகார் முதல் மந்திரியாக தொடர்ந்து இருந்து வரும் நிதிஷ்குமார் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். ஆனால் பாஜகவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார்.
சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர் “பாஜக ஒரு காலத்தில் வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களினால் சிறப்பாக இருந்தது. அவர்கள் என் மீது பாசம், மரியாதை வைத்திருந்தார்கள். ஆனால் இந்த பாஜகவில் அதையெல்லாம் பார்க்கமுடியவில்லை.
இந்த பாஜகவிற்கு மக்கள் மீது அக்கறையில்லை. நான் பாஜக கூட்டணியிலிருந்து விலகிவிட்டேன். இனி ஒருபோதும் அவர்களோடு கூட்டணி என்பதே கிடையாது. சோசலிச கட்சிகளுடன் இணைந்து மக்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பேன்” என தெரிவித்துள்ளார்.
Edited By: Prasanth.K