வெள்ளி, 13 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (08:17 IST)

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நிதிஷ்குமாரும் எதிர்ப்பு! பின்வாங்குமா மத்திய அரசு?

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வக்பு வாரிய சட்டத்திற்கு ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வக்பு அரிய சட்டத்திற்கு பாஜக கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வான், சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நிதீஷ் குமாரும் இந்த சட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலும் திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது தெரிந்தது. இந்த நிலையில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா கட்சி தலைவருமான நிதீஷ் குமார் வக்பு வாரிய சட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட திருத்தம் குறித்து முஸ்லிம்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறி தற்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் பின்வாங்கும் நிலை ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடக்க உள்ள நிலையில் அம்மாநிலத்தில் 18% முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதால் திடீரென நிதீஷ் குமார் இந்த விஷயத்தில் பின் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் உறுதியாக இருக்குமா? அல்லது மத்திய அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பின் வாங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran