வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:09 IST)

தமிழ் வெல்க கலைஞரின் சொந்த கையெழுத்துடன் 100 ரூபாய் நாணயம் மத்திய அரசு வெளியீடு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி- ஜவாஹிருல்லா!

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயற் குழு கூட்டம்  திருச்சியில் நடைபெற்றது.
 
கூட்டத்தில் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம் ஹெச் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார்.
 
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம்கூறியதாவது:-
 
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 இடங்களில் போதை பொருள் விழிப்பு இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம் ‌. சுதந்திர தினத்தன்று மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.
 
இது அரசமைப்பு சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு எதிராகவும் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு எட்டு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும். 
 
தமிழ் வெல்க என்கிற கருணாநிதியின் சொந்த கையெழுத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஒப்பீட்ட அளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் -ஒழுங்கு சீர்குலைவு திமுக ஆட்சியில் மிகவும் குறைவாகவே உள்ளது. 
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். 
 
அனைத்து மக்களுக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தலித்துகள் முதலமைச்சராக முடியும் அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்