புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:50 IST)

திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம்.. மத்திய அரசு அறிவிப்பு..!

Child
இதுவரை திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம் என மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்கள் உள்ளிட்டோர் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 30 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் இருந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு பிறகு 6 வயது வரை நிரம்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குழந்தைகள் தத்தெடுப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது அனைத்து தரப்பினரும் குழந்தைகள் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அதிக குழந்தைகள் தத்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva