1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (20:46 IST)

செவ்வாய் கிரகத்தில் சிவன் கோவில்: நித்யானந்தா அறிவிப்பு!

Nithyanandha
நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தில் பரமசிவனுக்கு கோவில் அமைக்க இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவால் பாலியல் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா தலைமறைவாக இருக்கும் நிலையில் கைலாசம் என்ற நாட்டில் இருப்பதாக கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களில் சிவன் கோவில் கட்ட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோயிலை நிர்மானிக்க கைலாச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
 
வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாக  அவர் தெரிவித்துள்ளார்