1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (16:31 IST)

செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Lord Murugan
வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்துவர வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை தடைகளும் விலகும்.


குறிப்பாக ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களால் வாழ்க்கையில் முன்னேற தடை ஏற்பட்டால் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு மிக மிக உகந்தது.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, 6 நெய் தீபங்கள் ஏற்றி மனமுருகி வேண்டிக்கொண்டால் சுபிட்சம் கிடைக்கும்.

இன்று இந்த மூன்று விஷேசங்களும் ஒருசேர வருவது மிகவும் சிறப்பு. இந்த அற்புதமான நாளில் முருகப்பெருமானை மனதார வழிபட்டால், வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்களையும் நீக்கி, சகல சௌபாக்கிங்களையும் தந்தருள்வார் முருகப்பெருமான்.

முருகப்பெருமானின் அருளும், ஆசியும் பெற இந்த வழிபாட்டை மேற்கொண்டு வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெறுவோம்.