திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (20:43 IST)

ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஏக்நாத் ஷிண்டேவும் ஆதரவு

draupati murmu
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு  அவர்களுக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இன்று காலை மகாராஷ்டிராவில் முன்னாள் முதலமைச்சர் சிவசேனா பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு அளிப்பது என்பது முடிவு செய்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு அளிப்பதால் பாஜகவுக்கு ஆதரவு என்று அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி கட்சி தலைவரான தலைவரும் மகாராஷ்டிர மாநில முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே திரெளபதி முர்மு அவர்களுக்கு முழு ஆதரவு என தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பல கட்சிகள் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவளித்த நிலையில் தற்போது மேலும் ஒரு சில கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது.