வீடியோவில் ரஞ்சிதாவோடு இருந்தது நித்யானந்தாதான் - ஆய்வில் உறுதி

Murugan| Last Updated: புதன், 22 நவம்பர் 2017 (22:23 IST)
7 வருடங்களுக்கு முன்பு வெளியான சர்ச்சை வீடியோவில் இருந்தது நித்யானந்தாதன் என்பது உறுதியாகியுள்ளது.


 

கடந்த 2010ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நாங்கள் இல்லை என ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததனர். எனவே, வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், 7 வருடங்குப்பிறகு, அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்ததான் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டெல்லி தடவியல் துறை உறுதி செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :